விமான நிலையங்களில் முககவசம் அணியாத பயணிகளிடம் ஸ்பாட் அபராதம் விதிக்க உத்தரவு

0 1306
விமான நிலையங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால், பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பல விமான நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்காமல் பயணிகள் அலட்சியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments