வன்னியர் இடப்பங்கீட்டு சட்டம் நிரந்தரமானது-பாமக நிறுவனர் ராமதாஸ்

வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம்மிடம் தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தரமானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தம்மிடம் தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விடுத்த அறிக்கையில், சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமானது எனவும், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டுவரப்படும் வரை அதுதான் நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின்னர் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, புதிய மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுவதை, பாமக உறுதி செய்யும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Comments