தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா..? தேர்தலுக்குப் பின் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாகத் தகவல்

0 28427
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்குப் பின் படிப்படியாகக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் விதிகளைப் பின்பற்றாததும், கொரோனா அச்சம் நீங்கியதால் மக்கள் அலட்சியத்துடன் வீதிக்கு வருவதும், கொரோனா பரவல் அதிகரிப்புக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாக்குப் பதிவு முடிந்த பின், இரவு நேர ஊரடங்கு, பொழுதுபோக்குப் பூங்காக்களுக்குச் செல்லத் தடை, மத நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களுக்குத் தடை எனத் தேவையைப் பொறுத்துப் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே, சென்னை அருகே அத்திப்பட்டில் ஆறாயிரம் படுக்கைளுடன் கூடிய சிறப்பு கொரோனா பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments