சிவங்ககை : ஆடுகளை நாய் கடித்த விவகாரத்தில் தந்தை, மகன் வெட்டிக் கொலை !- 3 பேர் சரண்

0 5953
சரணடைந்த கொலையாளிகள்

சிவகங்கை அருகே நாய் ஆடுகளை கடித்த விவகாரத்தில் தந்தை மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே அலுபிள்ளைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா . இவருக்கும் உடன் பிறந்த சகோதரி குடும்பத்துக்கு ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கருப்பையா வளர்த்து வந்த ஆட்டை அவரது சகோதரி வீட்டில் வளர்த்த நாய் கடித்து குதறியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கருப்பையாவும் அவரது மகன் சாமிநாதனும் சகோதரி வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்தகருப்பையாவின் சகோதரியின் மகன்களான தாமோதரன்,திருசங்கு,சுந்தர்ராஜ்,சிங்கராஜ் ஆகியோர் மாலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பையா மற்றும் அவரது மகன் சாமிநாதனைதேடிச்சென்றுவாக்குவாதத்தில்ஈடுபட்டுள்ளனர் ஒரு நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த கருப்பையாவும் அவரின் மகன் சாமிநாதனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிவகங்கை தாலுகா போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறுஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடி கொலையளிகளை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், தேடப்பட்டு வந்தவர்களில் 3 பேர் திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments