15 ஆண்டுகள் பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது: தேர்தல் ஆணையம் உறுதி

0 1731
வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தல் ஆணையம் உறுதி

வரும் தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து  சென்னை உயர் நீதிமன்றத்தில்  திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதித்த பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்களை இணையம் மூலமாக தொடர்பு கொண்டு வாக்குப்பதிவில் திருத்தம்  செய்ய முடியாது என்றும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுக்கப்படும் மையங்களில் ஜாமர் பொருத்த அவசியமில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

15 வருடங்களுக்கு மேல் பழமையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அது தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பதட்டமான வாக்குச்சாவடிகள் பட்டியல் வழங்க இயலாது, 44 ஆயிரம் சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்படும், 11 ஆயிரத்தும் மேற்பட்ட பதற்றமான வாக்குசாவடிகள் முழுமையாக இணையதளம் முலமாக நேரலை செய்யப்படும் உள்ளிட்ட விவரங்கள் பதில் மனுவில் உள்ளன.

பதில் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், திமுகவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு நாளில் கொரோனா பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டும் வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments