புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் பிரமுகர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

0 1641
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் பிரமுகர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

லாஸ்பேட்டை பகுதியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் புவனேஸ்வரன் என்பவரது வீட்டில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன் வீட்டிலும், லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments