கொரோனா வேகமெடுப்பதால் திருப்பதியில் நேற்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள்?

0 2795
கொரோனா வேகமெடுப்பதால் திருப்பதியில் நேற்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி தரிசன டிக்கெட் பெற்று நடைபாதையாக வரும் பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன்பே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள் மதியம், ஒரு மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து முன்னறிவிப்பு இல்லாததால் பக்தர்கள் பலர் வழக்கம் போல் நேற்று காலை திருமலைக்கு செல்ல அலிபிரி சோதனைச் சாவடியில் குவிந்ததால், அனுமதி மறுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments