கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என தேர்தலுக்காக அதிமுக - பாஜக பொய் கூறுகிறது - மு.க.ஸ்டாலின்

0 1182

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என தேர்தலுக்காக அதிமுக - பாஜக பொய்ப்பிரச்சாரம் செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் ஆகியோரை ஆதரித்து, ஆரல்வாய் மொழியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள சரக்கு பெட்டக துறைமுகம் வராது என அதிமுக-பாஜக, தேர்தலுக்காக பொய் கூறுவதாகவும், ஆனால் டெண்டர் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழமுடியும் எனக் கூறியதாகவும், ஆனால் 7 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்திற்கான பிரத்யேக வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments