கொரோனா தடுப்பூசி பெறுவதில் பிரேசிலுக்கு பின்னடைவு… பிரேசில் வெளியுறவு அமைச்சர் ராஜினாமா..!

0 2116
கொரோனா தடுப்பூசி பெறுவதில் பிரேசிலுக்கு பின்னடைவு… பிரேசில் வெளியுறவு அமைச்சர் ராஜினாமா..!

கொரோனா தடுப்பூசியை போதிய அளவுக்கு பெற்றுத் தர இயலவில்லை என்பதால் பிரேசில் வெளியுறவு அமைச்சர் எர்னஸ்டோ அராஜுவோ ராஜினாமா செய்து விட்டார்.

நாட்டுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வதில் அராஜுவோ அரசியல் செய்வதாக பிரேசில் நாடாளுமன்றத்தில் அவர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உடன் அவர் நெருக்கமான உறவு வைத்திருந்ததும், சீனா மீதான அவரது விமர்சனங்களும், பிரேசிலுக்கு போதிய தடுப்பூசிகளை பெறுவதில் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிரேசிலில் கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments