வங்க கடலில், அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்: சென்னை வானிலை மையம்

0 1597
வங்க கடலில், அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்: சென்னை வானிலை மையம்

வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடுமென சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று  உருவாகக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாகக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடுமென்று கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments