டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் பதிவானது

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் காணப்பட்டது. தலைநகரில் வெப்ப நிலை 40 புள்ளி 1 டிகிரி செல்சியசாக காணப்பட்டது.
கடந்த 1945ம் ஆண்டில் தான் இதுபோன்ற வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசுவதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி எல்லையருகே போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கோடையின் வெயில் தாக்கத்தைக் குறைக்க மோர், லஸ்ஸி போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.
Comments