ஆப் ஆன ஆர்யா... சார்பட்டா பரம்பரை சாரி கேட்ட பரம்பரையானது..!

0 57854

வன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான காட்சியில் நடித்ததற்காக நேரடியாக வருத்தம் தெரிவித்ததையடுத்து ஆர்யா மீதான வழக்கை அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முடித்து வைத்து வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.

சார்பட்ட பரம்பரை படத்தில் நாயகனாக நடித்து வருபவர் ஆர்யா. இவரும் விஷாலும் இணைந்து பாலா இயக்கத்தில் நடித்த அவன் இவன் படம் 2011ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக சித்திரித்து சில காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ்.தீர்த்தபதி மகன் சங்கராத்மஜன் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு 2018 இல் பாலா, ஆர்யா இருவருக்கும் தனித்தனி வழக்காக பிரிக்கப்பட்டு நடந்துவந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை நேரில் ஆஜரான ஆர்யா அடுத்தடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து ஆர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை காலை நடிகர் ஆர்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜரானார்.

நீதிபதி வழக்கை பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தார். மீண்டும் பகல் 2 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்யா தரப்பில், சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு சங்கராத்மஜனிடம் , அந்தக் காட்சியில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதி கார்த்திகேயன் வழக்கை முடித்து வைத்து, ஆர்யாவை விடுவித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறும்போது இந்தப் படத்தின் காட்சிகள் யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. இருந்தாலும் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு சங்கராத்மஜன் மனம் புண்பட்டு இருப்பதாக கூறுவது வருத்தமாக உள்ளது. அவரை இதுவரை நேரில் சந்திக்க இயலவில்லை. தற்போது நேரில் சந்தித்து அந்தக் காட்சியில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

4 வருடமாக இழுத்த வழக்கை ஒற்றை மன்னிப்பு ஒரே நாளில் முடித்து வைத்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments