தாராபுரத்தில் செவ்வாய்கிழமை அன்று பிரதமருடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம்

0 2720

பிரதமர் நரேந்திரமோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தாராபுரத்தில் செவ்வாய்கிழமை அன்று ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

இதற்காக டெல்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில், தாராபுரத்தில் கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு அருகிலேயே வந்திறங்குகிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று அவர் அதிமுக , பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார்.

பிரதமருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். பிரதமர் வருகையை ஒட்டி தாராபுரத்தில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments