ஓட்டு போடாட்டி பொம்பள சாமி கண்ண குத்திடும்..! திமுக வேட்பாளர் சொல்கிறார்

0 2419
ஓட்டு போடாட்டி பொம்பள சாமி கண்ண குத்திடும்..! திமுக வேட்பாளர் சொல்கிறார்

உதய சூரியனுக்கு வாக்களிக்காவிட்டால் பொம்பளசாமி கண்ணகுத்திவிடும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திமுக வேட்பாளர் மதியழகன் வேடிக்கையாக கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி திமுக வேட்பாளராக மதியழகம் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் சீனிவாசபுரம் ஆம்பள்ளி, ஐகுந்தம் உளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்கு சேகரிக்க செல்லும் ஊர்களில் உள்ள கோவில்களில் சாமி கும்பிடும் , மதியழகன் அங்கு கூடுகின்ற பெண்களிடம், தான் சாமி கும்பிடும் போது சாமி தனது காதில் வந்து எல்லோரையும் உதய சூரியனுக்கு ஓட்டுபோட சொல்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதுவும் ஆம்பள சாமி இல்லை பொம்பள சாமி , எனவே உதய சூரியனுக்கு வாக்களிக்க வில்லை என்றால் சாமி உங்க கண்ணை குத்தி விடும் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது

அதே போல மற்றொரு ஊரில் ஆரத்தி எடுத்து பூவை எரிந்து வரவேற்ற பெண்களிடம் பேசிய மதியழகன், மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்ற போது மாரியம்மன் தன்னிடம் பேசியதாகவும், யாராவது உதயசூரியனுக்கு மாற்றி போட்டால் கண்ண குத்திருவேன்னு சொல்லிச்சு, நான் எங்க ஆளுங்க மாத்தி போட மாட்டாங்க கண்ண குத்திராதன்னு சொல்லி வச்சிருக்கேன்னும் கலகலப்பூட்டினார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments