தமிழகத்தில் இன்று 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 4105

தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு 3 - வது நாளாக  2 ஆயிரத்தை தாண்டி, படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிதாக 2 ஆயிரத்து 279 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 352 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

சிகிச்சை பலனின்றி  14 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், மேலும் 815 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாகவும்,9 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments