உச்சம் எட்டும் கொரோனா அச்சம்.. விழிப்புடன் இருந்தால் தப்பிப்பது நிச்சயம்..!

0 3750

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி கட்டாயம் தேவை என பிடிவாதம் பிடிக்கக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனாவுக்கான சிகிச்சை வசதிகள் குறித்து விவரிக்கிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருவதால் அரசு மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் அனைத்தும் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளன. அதேநேரம், எத்தகைய சூழல் உருவானாலும் அதனை சமாளிக்கும் வகையில் தமிழக சுகாதாரத் துறை தயாராகி வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கென மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 38 ஆயிரம் படுக்கை வசதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 40 ஆயிரம் படுக்கைகள், ஆக்சிஜனுடன் கூடியவை.

இதுதவிர, சென்னையை அடுத்த அத்திப்பட்டில் 6 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இவை தவிர அண்ணா பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் பிரெசிடென்சி கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 ஆயிரம் புதிய படுக்கைகள் தயார் செய்யவும் திடமிட்டப் பட்டுள்ளது.

எனவே, யாரும் அச்சப்பட தேவை இல்லை என கேட்டுக் கொண்டுள்ள சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி தேவை என கட்டாயப் படுத்துவதை தவிர்க்குமாறு, கொரோனா நோயாளிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

விழிப்புடன் இருந்தால் கொரோனாவின் பிடியில் இருந்து நிச்சயம் தப்ப முடியும் என கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள், தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, ஒவ்வொருவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments