நீட் முறைகேடு வழக்குகளை சிபிஐ முறையாகக் கண்காணிக்கும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 491
நீட் முறைகேடு வழக்குகளை சிபிஐ முறையாகக் கண்காணிக்கும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ முறையாகக் கண்காணிக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, நீட் தேர்வு முறைகேடு குறித்து எந்தெந்த மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டார்.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டெல்லியிலும் நீட் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு உள்ளதாகவும், அது குறித்த தகவல்களையும் சேகரிக்க வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்யக் கால நீட்டிப்பு வழங்க வேண்டுமென சிபிஐ கோரியது. இதையடுத்து ரஷீதின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments