"தமிழ்நாடு பெயர் தக்ஷினபாரத் என மாற்றப்படும்" என்று உலவும் செய்தி குறித்து வானதி சீனிவாசன் விளக்கம்

0 10555

"பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற பெயர் தஷ்சினபாரத் என மாற்றப்படும்" என்று இணையத்தில் உலவும் செய்தி பொய்யானது என்றும் ஆதாரமற்றது என்றும் கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவியிடம் இது குறித்து கேட்டபோது குறுக்கிட்ட வானதி சீனிவாசன், இணையத்தில் யாரோ எழுதிவிட்டுச் செல்லும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்றார்.

முன்னதாக தாம் வெற்றிபெற்றால் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி கொண்டுவர மாநில அரசை வலியுறுத்துவேன் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments