பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு

0 2217
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு

பிரதமரின் வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுச்சேரியில் இன்றும் நாளையும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புதுச்சேரி மண்டலம் No fly zone ஆக அறிவிக்கப்பட்டு, ஆளில்லா குட்டி விமானங்கள், ட்ரோன்கள் உட்பட எதுவும் பறக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments