விபத்து வழக்குகளில் இழப்பீடு கோரிக்கையைப் பெற, பரிசீலிக்க இணையத்தளத்தை தொடங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

0 659
விபத்து வழக்குகளில் இழப்பீட்டுக் கோரிக்கையைப் பெறவும், பரிசீலிக்கவும் தேசிய அளவிலான இணையத்தளத்தைத் தொடங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து வழக்குகளில் இழப்பீட்டுக் கோரிக்கையைப் பெறவும், பரிசீலிக்கவும் தேசிய அளவிலான இணையத்தளத்தைத் தொடங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சாலை விபத்து பற்றிய அறிக்கையைத் தீர்ப்பாயங்களுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மின்னஞ்சலில் 48 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் எனக் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இழப்பீட்டைக் கணக்கிடத் தேவையான ஆவணங்களுடன், விபத்து குறித்த விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்குள் தீர்ப்பாயத்துக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து விவாதித்த பின் அறிக்கை அளிப்பதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments