திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்ய தாக்கலான மனு; தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்ய தாக்கலான மனு; தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதால், திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், திருச்சுழியில் தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் எனவும் சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள்,புகார் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி நிவாரணம் பெறுமாறு கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
Comments