முதலமைச்சரின் தாயார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரினார் ஆ.ராசா...

0 6293
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரினார் ஆ.ராசா

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மனந்திறந்த மன்னிப்பு கோரியுள்ளார்.

இரு நாட்களுக்கு முன்னர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.

ஆ.ராசா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதோடு, அதிமுகவினர் புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆ.ராசா உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆ.ராசாவின் பேச்சு தனது மனதை புண்படுத்திவிட்டதாகக் கண் கலங்கினார்.

இந்நிலையில், உதகையில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, முதலமைச்சர் எனது பேச்சால் காயம் பட்டு கலங்கினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் கூறிய ஆ.ராசா, தனது பேச்சுக்காக அடிமனதின் ஆழத்தில் இருந்து வருத்ததைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மனந்திறந்த மன்னிப்பைக் கோருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments