பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த பெருநகரமாக சென்னையை மாற்றியுள்ளோம் - முதலமைச்சர் பிரச்சாரம்

0 1496
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.நட்ராஜை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், அண்மையில் 62,000 கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெறுகின்றன என்றும், பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த பெருநகரம் சென்னை எனவும் முதலமைச்சர் கூறினார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது என்றும், வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். 

தியாகராய நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக மாநகர் முழுமையாக மழை நீர் தேங்காமல் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அண்ணாநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவின் லியோனி பெண்களை கீழ் தரமாக கொச்சைப்படுத்தி பேசி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments