பொன்.ராதா பக்கத்து வீட்டில் ஐ.டி.ரெய்டு.. கணக்கில் வராத பணம் பறிமுதல்..!

0 5381
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனின் பக்கத்து வீட்டில் நடைபெற்று வரும் ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத 85 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனின் பக்கத்து வீட்டில் நடைபெற்று வரும் ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத 85 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணனின் வீடு நாகர்கோவிலில் ஜெகநாதன் தெருவில் அமைந்துள்ளது. இவரது வீட்டருகே அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் ரமேஷ் என்பவரது வீடு உள்ளது.

ரமேஷ் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், இங்குள்ள வீட்டில் அவரது தாய் மட்டும் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் ரமேஷ் தனது மகளுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் நள்ளிரவு முதல் அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் கணக்கில் வராத 85 லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணத்தை கைப்பற்றியுள்ள அதிகாரிகள் அது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments