அதிமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி , பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

0 2090

அதிமுக தேர்தல் அறிக்கை அமுதசுரபி என்றும் பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இளவழகனை ஆதரித்து, ஞாயிற்றுகிழமை மாலை ஆற்காடு அருகே கலவை பகுதியில் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் இதனை தெரிவித்தார். மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை தடுக்க பாலாற்றில் ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து மருதாலம் கூட்ரோடு பகுதியில் சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments