தமிழ் மொழியை கற்க முயற்சி செய்து வருகிறேன்; தமிழகம் இல்லாமல் இந்தியாவே இல்லை -ராகுல்காந்தி

0 1943
தமிழ் மொழியை கற்க முயற்சி செய்து வருகிறேன்; தமிழகம் இல்லாமல் இந்தியாவே இல்லை -ராகுல்காந்தி

தாம் பிறப்பால் தமிழன் இல்லை என்றாலும் தமிழக மக்களின் உணர்வு நன்கு புரியும் என்றும், தமிழ் மொழியை கற்க முயற்சித்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹசன் மௌலானா, சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, சோளிங்கர் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம் ஆகியோரை ஆதரித்து சென்னையில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக - காங்கிரஸ் அமைத்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மூலம் தமிழகத்திற்கு புதிய சிந்தனைகள், வழிமுறைகளை வழங்க முடியும் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, தமிழகம் இல்லாமல் இந்தியாவே இல்லை என புகழாரம் சூட்டினார்.

இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments