2 ஆவது தடுப்பூசி வெளியாவது மேலும் சில மாதங்கள் தாமதமாகும்: சீரம் இந்தியா அறிவிப்பு

அமெரிக்காவின் நோவாவாக்சுடன் இணைந்து சீரம் இந்தியா தயாரிக்க உள்ள கொரோவாக்ஸ் தடுப்பூசியின் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதம் வரை தள்ளிப்போகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது சீரம் இந்தியா நிறுவனம். இரண்டாவது தடுப்பூசியாக, கோரோவாக்ஸ் தடுப்பூசியை ஜூன் மாதத்தில் வெளியிட சீரம் இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்த தடுப்பூசி ஆப்பிரிக்க மற்றும் பிரிட்டன் மரபணு மாற்ற வைரசுகளுக்கு எதிராக 89 சதவிகிதம் செயல்திறன் உள்ளது எனவும் சீரம் இந்தியா அறிவிப்பு வெளியிட்டது.
அதற்கான சோதனைகளும் ஏற்கனவே துவங்கி விட்டன. ஆனால் முக்கிய மூலப்பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதால், இந்த தடுப்பூசி தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments