"கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சபரிமலையின் மரபுகளும், மாண்புகளும் நிலை நிறுத்தப்படும்" - ராஜ்நாத் சிங் வாக்குறுதி

0 1506
"கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சபரிமலையின் மரபுகளும், மாண்புகளும் நிலை நிறுத்தப்படும்" - ராஜ்நாத் சிங் வாக்குறுதி

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சபரிமலையின் மரபுகளும், மாண்புகளும் நிலை நிறுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், கேரள இடதுசாரி கூட்டணி அரசு, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

தங்க கடத்தல் வழக்கு உள்ளிட்டவற்றை விசாரிக்கும் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேரள அரசு பரிந்துரைத்துள்ளதை ராஜ்நாத் சிங் கடுமையாக கண்டித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments