வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 940
வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இருநாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வட மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments