மதுரையில் அதிகாலையில் குடியிருப்பில் வெடித்துச் சிதறிய சமையல் சிலிண்டர்... ஒருவர் உயிரிழப்பு..!

0 44917
மதுரையில் அதிகாலையில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கட்டிடங்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

மதுரையில் அதிகாலையில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கட்டிடங்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

மதுரை பாலரங்காபுரம், EE ரோடு ஒன்றாவது தெருவில் வசித்து வந்தவர் சரவணன். 10 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியைப் பிரிந்த சரவணன், தனியாக வசித்து வந்துள்ளார்.

அதிகாலை சரவணன் வீட்டில் சமையல் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது வீடு உருக்குலைந்தது.

அருகே உள்ள ஜிஆர்டி திருமண மண்டபத்தின் ஒரு பக்க சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. கட்டிட இடிபாடுகள் விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நடந்தது விபத்தா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments