இந்தியாவில் கொரோனா 2வது அலைக்கு காரணம் என்ன?

0 4113

இந்தியாவின் 12 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்து இரண்டாவது அலை என்று வர்ணிக்கப்படுகிறது.

இதற்கு காரணம் 50 சதவீத பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வதுதான் என்று மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 90 சதவீத மக்களுக்கு முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வு உள்ள போதும் 44 சதவீதம் பேர்தான் அவற்றை அணிகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரனாவால் பாதிக்கப்பட்ட ஒரு தனிநபர் தனிமைப்படுத்தப்படாவிட்டால்,  30 நாட்களில் 400 பேருக்கு கொரோனாவைப் பரப்ப முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் எச்சில் துப்புவது போன்ற பழக்கங்களைத் தடுக்க கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments