இந்தியா - வங்க தேசம் இடையே 5 புதிய ஒப்பந்தங்கள்

0 1856
இந்தியா - வங்க தேசம் இடையே 5 புதிய ஒப்பந்தங்கள்

வங்கதேசத்தில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தலைநகர் டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வழங்கியுள்ள 109 ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் விதமாக மாதிரி சாவியை ஒப்படைத்தார். 12 லட்சம் டோஸ் அளவு கொரோனா தடுப்பூசி மருந்துகளை, வங்கதேசத்திற்கு இந்தியா வழங்கியதை குறிக்கும் நினைவூட்டல் பெட்டகத்தையும் மோடி வழங்கினார்.

இந்தியாவின் கடனுதவி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன் ரூப்பூர் அணுமின் நிலையத்தை நிறுவது,உள்ளிட்டவை தொடர்பான, ஷேக் ஹசீனா - பிரதமர் மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது,  ஃபெனி ஆற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான முடிவை விரைவாக இறுதி செய்யுமாறு, பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்தை வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments