சென்னையில் நாளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் நாளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அங்கிருந்து கார் மூலம் வேளச்சேரி வரும் அவர், அந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற்பகல் 2.30 மணியளவில் ஹெலிகாப்டரில் சேலம் செல்லும் ராகுல் காந்தி, அங்கு நடைபெறும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments