முழுமையான விமானப் போக்குவரத்து இப்போதைக்கு இல்லை: விமானப் போக்குவரத்து அமைச்சர்

0 1236
முழுமையான விமானப் போக்குவரத்து இப்போதைக்கு இல்லை: விமானப் போக்குவரத்து அமைச்சர்

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை பரவுவதால், ஏற்கனவே அறிவித்தபடி,  ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து விமான சேவைகள் முழுமையாக துவக்கப்பட மாட்டாது என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

அதே நேரம், கொரோனாவை காரணம் காட்டி தற்போது இயக்கப்படும் விமான சேவைகள் எதுவும் நிறுத்தப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் அதன் பின்னர் மே மாதம் 25 ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக துவக்கப்பட்டு தற்போது 80 சதவிகித சேவைகள் நடக்கின்றன.

அதை 100 சதவிகிதமாக்கும் முடிவு கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments