தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது - மு.க.ஸ்டாலின்

0 2994
தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது - மு.க.ஸ்டாலின்

தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் திமுகவினர், உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை பயன்படுத்தக் கூடாது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பரப்புரையில் ஈடுபடும் திமுகவினர் கண்ணியக் குறைவான சொற்களை பயன்படுத்தினால், அதனை திமுக தலைமை ஒருபோதும் ஏற்காது என்றும், மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுகவினரின் பேச்சை வெட்டியும், ஒட்டியும் தவறான பொருள்படும் படி பரப்புவதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், எதிரிகளின் நோக்கத்தை அறிந்து திமுக நிர்வாகிகள், பேச்சாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments