முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சை பேச்சு - ஆ.ராசா விளக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறு பேசவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார.
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு அடங்கிய காணொலி, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசியதாக கூறி ஆ.ராசாவைக் கண்டித்துச் சென்னையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் பற்றியும் அவர் தாய் பற்றியும் பேசினார்.
இதைக் கண்டித்துச் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் அதிமுகவினர் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோல் மயிலாப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் ஆ.ராசாவின் உருவப்பொம்மையை எரித்தனர்.
Comments