அனைத்துத் துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 925
அனைத்துத் துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்துத் துறைகளிலும், ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில மதிப்பீடு நிர்ணயம் தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலத்தின் மதிப்பை உயர்த்தி நிர்ணயித்ததில் தவறில்லை எனத் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதி, ரவியின் வழக்கைத் தள்ளுபடி செய்தார். நில மதிப்பைக் குறைவாக நிர்ணயித்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

அனைத்துப் பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்புப் பிரிவை அமைக்கப் பதிவுத்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments