மயிலாடுதுறை அருகே பயங்கர வெடி சத்தத்துடன் கூடிய நில அதிர்வு; கிராம மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேற்றம்

மயிலாடுதுறை அருகே பயங்கர வெடி சத்தத்துடன் கூடிய நில அதிர்வு; கிராம மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேற்றம்
மயிலாடுதுறை அருகே பயங்கர வெடி சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
மறையூர் ஊராட்சிக்குட்பட்ட கோவங்குடி கிராமத்தில் சிறிய ரக விமான ஒன்று தாழ்வாக பறந்ததாகவும், இதனையடுத்து பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா உடனடியாக அக்கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அந்த வழியாக சென்ற இந்திய ராணுவ பயிற்சி விமானம் ஏர்லாக் கிளியர் செய்த போது சத்தம் ஏற்பட்டதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் வட்டாட்சியர் பிரான்சுவா தெரிவித்தார்.
Comments