வங்கதேசம் ஈஸ்வரிப்பூரில் உள்ள காளி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு..!

0 1955
வங்கதேசம் ஈஸ்வரிப்பூரில் உள்ள காளி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு..!

ங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி காளிகோவிலில் வழிபாடு நடத்தியதுடன், ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

வங்கதேச விடுதலைப் பொன்விழாவையொட்டி அந்நாட்டுக்கு இருநாள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி ஈஸ்வரிப்பூரில் உள்ள காளிகோவிலில் இன்று வழிபாடு நடத்தினார். அதன்பின் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பில் இருந்து மனிதகுலத்தை விடுவிக்கும்படி காளியிடம் வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார்.

துங்கிப்பாரா என்னுமிடத்தில் உள்ள ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அந்த வளாகத்தில் மரக்கன்றையும் நட்டார். அப்போது அவருடன் பிரதமர் ஷேக் ஹசீனா உடனிருந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments