முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

0 5840
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் உட்பட 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது.

இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 9-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments