அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்களிக்க வாருங்கள்..! மே.வங்கம், அசாம் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி அழைப்பு

அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்களிக்க வாருங்கள்..! மே.வங்கம், அசாம் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி அழைப்பு
மேற்கு வங்கத்தில் நடக்கும் முதற்கட்ட தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் சாதனை அளவாக திரண்டு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
எட்டு கட்டங்களாக நடக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதைப் போன்று அசாமில் 12 மாவட்டங்களில் 47 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
இதை முன்னிட்டு டுவிட்டரில் இந்த வேண்டுகோளை மோடி வெளியிட்டுள்ளார். குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருமாறு அவர் தமது டுவிட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Comments