வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு

0 1789
வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

2 நாள் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். இந்நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிட்டகாங் மற்றும் டாக்கா நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதில் சிட்டகாங் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டினர்.

ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால்,கூட்டத்தைக் கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments