”புதுச்சேரி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” - ரங்கசாமி குற்றம்சாட்டு

0 1571
”புதுச்சேரி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” -என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டு

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தட்டாஞ்சாவடி புதுப்பேட்டையில் தனது பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் கொண்டு வரவில்லை என்றும், இளைஞர்களுக்கு எந்தவித வேலை வாய்ப்பையும் உருவாக்கவில்லை என்றும் கூறினார்.

காங்கிரஸ் அரசின் தவறான செயல்பாட்டால் புதுச்சேரி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டிய ரங்கசாமி, அடுத்தவர்கள் மீது குறை சொல்லியே நாராயணசாமி தனது ஆட்சியை கடத்தியதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments