எகிப்தில் அசுரவேகத்தில் வந்த ரயில் மற்றொரு ரயிலின் மீது மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழப்பு; 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

0 2595
எகிப்தில் அசுரவேகத்தில் வந்த ரயில் மற்றொரு ரயிலின் மீது மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழப்பு

கிப்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. புறப்பட்டுக் கொண்டிருந்த ரயிலின் பின்புறமாக அதே தடத்தில் வேகமாக வந்த மற்றொரு ரயில் பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 32 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்புறம் வந்த ரயிலின் அவசரகால பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்திருப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments