”நெசவாளர்களுக்கு இலவச பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்” -முதலமைச்சர் உறுதி

0 1915
”நெசவாளர்களுக்கு இலவச பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்” -முதலமைச்சர் உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் சிறக்க அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி மற்றும் 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும், ஏழை எளிய நெசவாளர்களுக்கு இலவசமாக பசுமை வீடு கட்டித் தரப்படும் என்றும் உறுதியளித்தார்.

பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க நலவாரியம் அமைத்துக் கொடுத்தது அதிமுக அரசு என்று குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், வாஷிங்மெஷின் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

ராஜபாளையம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்த முதலமைச்சர், நேற்று இரவு அகஸ்தீஸ்வரம் வந்து சேர்ந்தார். இன்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரையும், அந்த மாவட்டத்தில் சட்டப்பேரவைக்கு போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments