ஷகிலாவுக்கு சொல்லிக் கொடுப்பாங்களாம்..! காங்கிரஸ் கலாட்டா

0 4416

சினிமா கவர்ச்சி நடிகை ஷகீலா, காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்த அன்றே அவருக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, காங்கிரஸின் கொள்கை தெரியாமல் விழித்த ஷகீலாவுக்கு, அரசியல் சொல்லிக் கொடுக்கும் டியூசன் மாஸ்டர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களையும், பல்போன பெருசுகளையும் தன்னுடைய அதீத கவர்ச்சி படங்களால் ஜொல்லு விட வைத்தவர் நடிகை ஷகீலா..!

தற்போதைய தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியினரும் ஒரு நடிகையை பிரச்சாரத்தில் களமிறக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கட்சியில் இணைந்த அன்றே மனித உரிமை பிரிவின் பொது செயலாளர் பதவி கொடுத்து நடிகை ஷகீலாவை களமிறக்கியுள்ளனர்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஷகீலாவை கண்டு உற்சாகமடைந்த செய்தியாளர்கள் அவரிடம் கேள்விக்கணைகளை தொடுக்க, அத்தனைக்கும் பதில் சொல்ல இயலாமல் திணரும் நிலைக்கு தள்ளப்பட்டார் ஷகீலா..!

கொள்கைகள் பிடித்துபோனதால் காங்கிரஸில் இணைந்ததாக தெரிவித்த ஷகீலாவிடம், எந்த கொள்கை என்று கூற முடியுமா என்று கேட்டதற்கு, தான் கொள்கையெல்லாம் தெரிந்து கொண்டுவரவில்லை என்று தடுமாற, அருகில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், சொல்லிக் கொடுத்தனர்..!

சனிக்கிழமை முதல் பிரச்சாரத்தில் களமிறங்கபோவதாக தெரிவித்த ஷகீலாவிடம், எந்த கொள்கையை சொல்லி பிரச்சாரம் செய்வீர்கள் என கேட்டதற்கு மீண்டும் திரு திருவென விழித்தார் ஷகீலா..!

தமிழ் நாட்டில் உள்ள ஏதாவது 5 பிரச்சனைகள் குறித்து கூறுங்கள் என சாய்ஸ் கொடுத்து கேட்ட போதும், கேள்விக்கு பதில் தெரியாத மக்கு மாணவனை போல விழித்தார்..!

அவருக்கு தமிழ் நாட்டின் பிரச்சனைகள் குறித்து சொல்லிக் கொடுப்போம் என்று சமாளித்தார் காங்கிரஸ் மனித உரிமை பிரிவின் தலைவர் சீனிவாசன்.

இங்கிருந்து பாஜகவுக்கு சென்ற குஷ்புவிடம் இப்படி கேள்வி கேட்டதுண்டா? என ஷகீலா திடீரென பொங்க, அவரிடமும் இதே போன்று கேட்டதாக செய்தியாளர்கள் எதிர் குரல் எழுப்பியதால், அக்கா குஷ்புவோடு என்னை ஒப்பிட வேண்டாம் என்று டக்கென்று ஜகா வாங்கினார் ஷகீலா.

முன்னதாக தன்னை 3 கட்சிகள் அழைத்ததாகவும், தனக்கு சிறந்த கட்சி காங்கிரஸ் என்பதால் அதில் இணைந்ததாக ஷகீலா தெரிவித்தார். இனியாவது காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments