ஏப்.1 முதல்., விவசாயிகளுக்கு., மும்முனை மின்சாரம்.! முதலமைச்சர் பரப்புரை.!

0 2718
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வருகிற ஒன்றாம் தேதி முதல் 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வருகிற ஒன்றாம் தேதி முதல் 24 நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், இராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இ.பி.எஸ் வாக்கு சேகரித்தார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என உறுதிபடக் கூறியிருக்கும் முதலமைச்சர், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

நாட்டிலேயே சட்டம்-ஒழுங்கை சீராக வைத்திருப்பதில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் விளங்குவதாக பெருமிதம் தெரிவித்துள்ள இ.பி.எஸ், ஜெயலலிதா வழியில் சட்டம்-ஒழுங்கை பேணி காத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அம்மா வாஷிங் மெஷின், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு, பனை வளர்ப்பு மற்றும் பனை பொருள் உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் திட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இ.பி.எஸ் உறுதியளித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments