மும்பையில் சன்ரைஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

0 1456
மும்பையில் சன்ரைஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

மும்பையில் சன்ரைஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

வணிக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்றவர்கள்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மன்னிப்பு கோரியுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்த உத்தவ் தாக்கரே, தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments