ஐ.பெரியசாமியின் பேரன் வாக்கு சேகரிப்பு..! தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம்

0 3299
சென்னை பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை கொலை செய்ய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என காவல் துறை விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும், பழனி தொகுதியில் அவரது மகன் ஐ.பி செந்தில்குமாரும் போட்டியிடும் நிலையில், அவரது 13 வயது பேரன் வேட்டி சட்டை அணிந்து வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றான்...

திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி , இவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி செந்தில் குமார் பழனி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் பள்ளியில் படித்து வரும் ஐ.பி செந்தில்குமாரின் 13 வயது மகன் ஆதவன் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தனது தந்தைக்கு ஆதரவாக பழனி தொகுதியில் வாக்கு சேகரித்து வருகின்றார்.

பழனியை அடுத்த ஆயக்குடியில் போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனை பார்த்து என்று கோஷம் எழுப்பியபடியே வீதிவீதியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சிறுவன் ஆதவனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

தனது தந்தையின் படத்தை கையில் வைத்துக் கொண்டு கோஷமிட்டப்படியே வாக்கு சேகரித்த சிறுவன், ஒரு பெண்ணிடம் தங்கள் ஆட்சியில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு இருந்ததாகவும், தற்போது என்ன விலை என்று தனக்கே தெரியவில்லை என்று கூறிச்சிரித்தபடியே வாக்கு சேகரித்தான்.

வாக்காளர்களை கவர்வதற்கு இன்னும் குடும்பத்தில் இருந்து யாரெல்லாம் பிரச்சாரத்தில் களம் இறக்கபட இருக்கிறார்களோ ? என்பதே வாக்களர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments