'என்னோட தந்தையை கொன்றவனை , கொல்லாமல் விட மாட்டேன்!' நடுரோட்டில் அமர்ந்து மகள் தர்ணா

தன் தந்தையை கொன்ற ரவுகளை கைது செய்ய கோரி ரவடி ராமராஜின் மகள் ரோட்டில் தனி ஆளாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பாட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடியும் மாட்டு வியாபாரியுமான தமிழன் என்ற ராமராஜ். இவர் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி என்று 40க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் ராமராஜை அடித்து கொலை செய்து சங்கரன்கோவில் நெல்லை சாலையில் உள்ள சாஸ்தா கோவிலில் அருகே உடலை வீசி விட்டு சென்று விட்டனர். தகவலறிந்த சின்னகோவிலாங்குளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமராஜை அடித்து கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவருடைய மகள் மகாலட்சுமி சங்கரன்கோவில் தேரடி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் . போலீஸார் அவரிடத்தில் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், தன் தந்தையை கொலை செய்தவனை கைது செய்ய வேண்டும். 'என் தந்தைக்காகவே வாழ்ந்து வந்தேன். என் அப்பா உயிர் என்னோட உயிர் வேறில்லை. என் அப்பாவை கொன்றவர்களை கொலை செய்யாமல் விட மாட்டேன்' என்று சபதமிட்டார். மகாலட்சுமியின் மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . தர்ணாவை கைவிட மறுத்ததால், காவல்துறையினர் மகாலட்சுமியையும் அவருடைய தம்பியையும் கைது செய்தனர்.
Comments